போன் ஷோரூமில் நுாதன மோசடி; 4 ஊழியரை கைது செய்த போலீஸ்
திருப்பூர் : திருப்பூரில் மொபைல் போன் விற்பனை மையத்தில் நுாதனமாக மோசடி செய்த ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் முனிசிபல் ஆபீஸ் வீதியில், மொபைல் போன் விற்பனை மையம் உள்ளது. இங்கு மொபைல் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தவணை முறையில் செலுத்த நிதி வழங்கும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் உள்ளனர்.
திருப்பூரைச் சேர்ந்த கார்த்திகேயன், 32, இடுவாயைச் சேர்ந்த தினேஷ்குமார், 25, பொள்ளாச்சி ராஜ்குமார், 34 ஆகியோர் இங்கு நிதி நிறுவன ஊழியர்களாக இருந்தனர்.
விற்பனை நிறுவன மேலாளர் பொம்மநாயக்கன்பாளையம் கார்த்திக், 47 என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் விற்பனை மையத்தில் மொபைல் போன்களை நிதி நிறுவன கடன் மூலம், தவணை முறையில் வாங்கிய வகையில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்தது தெரிந்தது.
கடந்தாண்டு அக்., மாதம் முதல் போலியான ஆவணங்களை கொடுத்து ஏறத்தாழ, 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்களை கார்த்திகேயன், தினேஷ்குமார், ரஞ்சித்குமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் மோசடியாக சேர்ந்து வாங்கியுள்ளனர்.
அவற்றை, திருப்பூரில் கடை வைத்துள்ள ராமு, பரீத் ஆகியோரிடம் கொடுத்து பணத்தை பெற்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில், திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு போலீசில் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் தொடர்புடைய நான்கு பேரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த ராமு மற்றும் பரீத் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 70க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
-
தமிழகத்தில் பரவலாக பெய்த கோடை மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…
-
கட்டுமான பணிக்கு 'எம் சாண்ட்' பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை!
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…