சென்டர் மீடியனில் கார் மோதி விபத்து

வானுார்: கிளியனுார் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமின்றி உயிர் தப்பினர்.
பெங்களூருவில் இருந்து புதுச்சேரி நோக்கி நேற்று காலை 11:00 மணிக்கு, (டி.என்.83.எம்சி.2398) என்ற பதிவெண் கொண்ட ஹூண்டாய் ஐ20 கார் சென்று கொண்டிருந்தது. திண்டிவனம்-புதுச்சேரி சாலையில், அருவாப்பாக்கம் சந்திப்பில் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது, ஏர் பலூன் வெளியே வந்ததால், காரில் இருந்த இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மொரட்டாண்டி டோல்கேட் ஊழியர்கள் கார் மீது மற்ற வாகனங்கள் மோதாமல் இருக்க தடுப்பு அமைத்தனர். விபத்து குறித்து கிளியனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 70க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
-
தமிழகத்தில் பரவலாக பெய்த கோடை மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…
-
கட்டுமான பணிக்கு 'எம் சாண்ட்' பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை!
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…
Advertisement
Advertisement