மளிகை கடையில் குட்கா உரிமையாளர் கைது

வானுார்: கிளியனுார் அருகே மளிகைக்கடையில் பதுக்கி வைக்கப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளரை கைது செய்தனர்.

கிளியனுார் அடுத்த கீழ்சித்தாமூரில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தனிபிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கிளியனுார் போலீசார் வெற்றிவேல் என்பவரின் மளிகைக்கடையில் சோதனை நடத்தினர். அங்கு குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. போலீசார் வெற்றிவேலை, 44; கைது செய்து, கடையில் பதுக்கி வைக்கப்பட்ட 1 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement