மனைவி மாயம் கணவர் புகார்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே, மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த திம்மச்சூரை சேர்ந்தவர் ஆதிசங்கர்,33; இவரது மனைவி ஜானகி, 30; இருவருக்கும் திருமணமாகி, 12 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு, 2 பிள்ளைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் திருவள்ளூவர் மாவட்டம், ஆனந்துாரில், செங்கல் சூளையில் வேலை செய்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன், திருமண நிகழ்ச்சிக்காக சொந்த ஊருக்கு வந்தனர். அடுத்த சில தினங்களில் ஆதிசங்கர், வேலைக்கு சென்று விட்டார். ஆனால், ஜானகி வீட்டிலேயே இருந்தார்.
இந்நிலையில் கடந்த,13ம் தேதி ஆனந்துாருக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு புறப்பட்ட ஜானகி அங்கு செல்லவில்லை. தொடர்ந்து, அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.
இது குறித்து, திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 70க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
-
தமிழகத்தில் பரவலாக பெய்த கோடை மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…
-
கட்டுமான பணிக்கு 'எம் சாண்ட்' பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை!
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…