தேசிய கருத்தரங்கு துவக்க விழா

சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலை தமிழ்துறை சார்பில் தேசிய கருத்தரங்கு துவக்க விழா நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார்.

தமிழ்துறை தலைவர் ஆனந்தகுமார் வரவேற்றார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அறம் ,இலக்கிய விமர்சகர் முருகேச பாண்டியன், முன்னாள் பேராசிரியர் ராமசாமி, தமிழ் வளர்ச்சி நிறுவன அலுவலர் வாசுகி ஜெயராமன், காந்திகிராம பல்கலை தமிழ்,இந்திய மொழிகள் துறை டீன் முத்தையா பேசினார்.'ஐந்தமிழ் ஆய்வுகள், ஆதிசங்கரர் வேதாத்திரி மகரிஷி, பிரம்ம ஞானம், மகான் நாராயண குரு, மரபும் புதுமையும் ' உள்ளிட்ட நூல்கள் வெளியிடப்பட்டன. ஐந்தமிழ் ஆய்வு மன்ற தலைவர் கருணாகரன் நன்றி கூறினார்.

Advertisement