பெரியபாளையம் சாலையில் விடுபட்ட பகுதியில் சீரமைப்பு

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை - ஜனப்பன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில், தினமும் 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.
சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர், நகரி, புத்துார், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் மஞ்சங்காரணி, கன்னிகைப்பேர், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வழியாக செல்கின்றன.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இச்சாலையை, 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி நடந்தது. ஜனப்பன்சத்திரம் துவங்கி மஞ்சங்காரணி வரை, தாராட்சியில் இருந்து பாலவாக்கம் மின்வாரிய அலுவலகம் அருகே மட்டும் சாலை அமைக்கப்பட்டது.
மற்ற இடங்களில் சாலை 'மில்லிங்' செய்யப்பட்டு, பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வந்தனர்.
இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை - ஜனப்பன்சத்திரம் இடையே விடுபட்ட பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை துவங்கியுள்ளனர்.
மேலும்
-
தமிழகத்தில் பரவலாக பெய்த கோடை மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…
-
கட்டுமான பணிக்கு 'எம் சாண்ட்' பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை!
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…
-
பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?