வனத்துறை செக்போஸ்ட்டில் 'வசூல்': வனவர் சஸ்பெண்ட்

தென்காசி:புளியரை வனத்துறை வாகன சோதனை சாவடியில் வாகனங்களில் பணம் வசூல் செய்த வனவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் புளியரையில் போக்குவரத்து, போலீஸ், வனத்துறை ஆகிய சோதனை சாவடிகள் உள்ளன.

கேரள மாநில எல்லையில் இருப்பதால் வாகனங்களை அந்தந்த துறையினர் சோதித்து அனுப்புவது வழக்கம்.

வனத்துறை சோதனை சாவடியில் கடந்த மூன்று நாட்களாக பணியில் இருந்த வனவர் சுப்பிரமணியன் 54, வாகனங்களில் கட்டாய வசூலில் ஈடுபட்டார். இதை ஒரு வேன் டிரைவர் வீடியோ எடுத்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட தென்காசி மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி, வனவர் சுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Advertisement