நாமக்கல் எஸ்.கே.வி., பள்ளி சாதனை

மதுரை: நாமக்கல் மாவட்டம் ம.கந்தம்பாளையம் எஸ்.கே.வி., பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.

பள்ளி அளவில், மாணவி கனிஷ்கா 495 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி தமிழ்விழி 493 மதிப்பெண் பெற்று 2ம் இடம், மாணவி லக் ஷனா 492 மதிப்பெண் பெற்று 3ம் இடம் பிடித்தனர்.

490க்கு மேல் 5 மாணவர்கள், 480க்கு மேல் 16 மாணவர்கள், 470க்கு மேல் 38 மாணவர்கள், 460க்கு மேல் 51 மாணவர்கள், 450க்கு மேல் 60 மாணவர்கள், 400க்கு மேல் 100 மாணவர்கள் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித்தலைவர் ரவி, பொருளாளர் பாலசுப்பிரமணியம், செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்ட நிர்வாக இயக்குநர்கள், முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement