தோட்டத்து வீடுகளில் திருட்டு தொடர் சம்பவத்தால் மக்கள் பீதி

வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, தோட்டத்து வீடுகளில் தொடர் திருட்டு சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
வெண்ணந்துார் அருகே, மதியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகு-திகளில், கடந்த, இரண்டு ஆண்டுகளில் ஏராளமான திருட்டு சம்ப-வங்கள் நடந்துள்ளன. அதில், கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் ரேடியோ செட், கோவில் மணி, தட்டம், சுவாமி கழுத்தில் இருந்த அரை பவுன் தாலி, பித்தளை போவனி; பாறைக்காடு
பகுதியில் கிணற்றில் இருந்த, மின் மோட்டார்; கல்கத்தானுார் குறவன் காடு சிவலிங்கம் கிணற்றில் இருந்த, மின் மோட்டார்.
மேலும், அதே பகுதியில் சோமு என்பவரின் கிணற்றில் இருந்த மின் மோட்டார், கேபிள் உள்ளிட்ட பொருட்கள் திருடு போயின. கடந்த, 16ல்- அக்கரைப்பட்டி அடுத்த பொரசல்பட்டி அலிஞ்சிக்-காடு பகுதியை சேர்ந்த ஜம்புகேஸ்வரன் என்பவரின் தோட்டத்து வீட்டின் முன்புறம் இருந்த கொட்டகையில் இருந்து, இரண்டு ஆடுகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து வெண்-ணந்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தோட்டத்து வீடுகளை குறிவைத்து திருடும் கும்பல், வெண்-ணந்துார் சுற்றுவட்டார பகுதியில், தொடர்ந்து அதிகாலை நேரங்-களில் கைவரிசை காட்டி வருவதால், மக்கள் பீதியடைந்துள்-ளனர்.

Advertisement