கோடை வெயில் இதை வாங்கிட்டீங்களா

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக வெப்பத்தில் இருந்து செல்லப்பிராணியை தற்காக்க, அதன் பராமரிப்பு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நீரிழப்பு ஏற்படாமல் பார்த்து கொள்வதோடு, கோடையிலும் அவை குஷியாக இருப்பதற்கு, மார்கெட்டில் சில பொருட்கள் விற்கப்படுகிறது. உங்கள் செல்லப்பிராணிகளுக்கு இதை வாங்கி கொடுத்து அசத்துங்க.

வாட்டர் பாட்டில்



குழந்தைகளுக்கான பீடிங் பாட்டில் போன்ற வடிவமைப்பில், முன்பகுதி வளைந்த நிலையிலான வாட்டர் பாட்டில்கள், செல்லப்பிராணிகளுக்கும் விற்கப்படுகிறது. இதன் கீழ் பகுதியில், பப்பிக்கான நொறுக்கு தீனிகளை நிரப்பி கொள்ளலாம். வாக்கிங் செல்லும் போதும், வெளியிடங்களுக்கு பப்பியை அழைத்து சென்றாலும், மறக்காமல் இந்த வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி கொள்ள வேண்டும். நீண்ட துார பயணங்களுக்கு, இது பெரிதும் பயன்படும்.

கூல் பெட்



மதிய நேரத்தில், அதிக வெயில் காரணமாக, உங்கள் செல்லப்பிராணி துாங்காமல் அவதிப்படுகிறதா… இந்த 'கூல் பெட்' உடனே வாங்கிடுங்க. இலவம்பஞ்சால் தயாரிக்கப்பட்ட இந்த மெத்தையில், சிறிது தண்ணீர் தெளித்துவிட்டு போட்டால், குளிர்ச்சியாக இருக்கும். தண்ணீர் மெத்தை மேல் தேங்காமல், கீழ்பகுதிக்கு சென்றுவிடுவதால், படுத்தவுடனே அவை துாங்கிவிடும்.

ஆட்டோமேட்டிக் வாட்டர் பவுல்



அதிக தாகம் எடுக்கும் போது, பப்பிக்கு பவுலில் தண்ணீர் வைத்தால், வேகமாக குடித்து சுற்றிலும் தண்ணீரை சிந்திவிடும். பின் அந்த இடத்திலே படுத்து கொள்வதால், ஈரப்பதம் காரணமாக, அதன் முடியில் முடிச்சு உருவாகிவிடும். இதை தடுக்க, 'ஆட்டோமேட்டிக் வாட்டர் பவுல்' வாங்கலாம். பவுலின் கொள்ளளவை பொறுத்து தண்ணீர் நிரப்பினால் போதும். பப்பிக்கு இதில் குடிக்க குடிக்க மட்டுமே தண்ணீர் மேலே வருவதால், வீணாகாமல் தடுக்கலாம்.

Advertisement