குமரகிரி ஏரியில் படகு சவாரி நடவடிக்கை எடுக்க உத்தரவு
சேலம்: சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை, குமரகிரி ஏரியை சுற்றுலாத்தலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணியை, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: ஏரி, 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதன் கரைகள் பலப்படுத்தப்பட்டு, நடைபயிற்சி மேற்கொள்ளும்படி பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஏரியை சுற்றி கம்பி வேலிகள் அமைக்கும் பணி நடக்கிறது. ஆகாயத்தாமரைகளை அகற்றி, ஏரியில் படகு சவாரி செய்யும் விதமாக பணி மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், கன்னிமார் ஓடைகளை துார்வாரி, மழைக்காலங்களில் தடையின்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் சிறுபாலம், தடுப்புச்சுவர்களை அமைத்து, கழிவுநீர் தேங்காதபடி பணியை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.மாநகர பொறியாளர் செல்வ நாயகம், மண்டல குழு தலைவர் தனசேகர், உதவி கமிஷனர் வேடியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும்
-
சென்னை ரயில்வே ஸ்டேஷனில் கணக்கில் வராத ரூ.38 லட்சம் பறிமுதல்
-
கலிபோர்னியாவில் வெடிகுண்டு தாக்குதல்; ஒருவர் பலி
-
ஹைதராபாத்தில் மூன்று மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பரிதாப பலி
-
மெக்சிகோ கடற்படை கப்பல் விபத்தில் சிக்கியது; 19 பேர் காயம்
-
பின்லாந்தில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 5 பேர் பரிதாப பலி!
-
முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!