பின்லாந்தில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 5 பேர் பரிதாப பலி!

2


எல்சிங்கி: பின்லாந்தில் 2 ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


எஸ்தோனிய தலைநகர் தாலினில் ஒன்றாகப் புறப்பட்ட 2 ஹெலிகாப்டர்கள் பின்லாந்தின் யூரா விமான நிலையத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர்.



ஒரு ஹெலிகாப்டரில் இரண்டு பேரும், மற்றொன்றில் 3 பேரும் இருந்தனர் என போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


இந்த விபத்துக்கான காரணம் குறித்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுடன் போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement