10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதத்தில் மட்டும் 1,710 பேர் தோல்வி

சேலம்: சேலம் மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய, 40,709 பேரில், 37,520 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 92.17 சதவீதம். தோல்வி அடைந்தவர்கள், 3,189 பேர். இது, 7.83 சதவீதம். இதை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது தோல்வி அடைந்தவர், 0.42 சதவீதம் குறைந்தது. ஆனால் பாட வாரியாக தோல்வி அடைந்தவர்கள், 4,967 பேர். ஒன்றுக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளில், 355 பேர் தழுவிய தோல்வியால், 1,778 பேர் அதிகமாகி, பாட வாரியான தோல்வி, 4,967 பேர் ஆனது.
அரசு பள்ளிகள்
தமிழ் - 602 பேர், ஆங்கிலம் - 120 பேர், கணிதம் - 1,389 பேர், சமூக அறிவியல் - 621 பேர், அறிவியல் - 1,123 பேர் என, பாடப்பிரிவுகள் முறையே அரசு பள்ளிகளில், 3,855 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.
உதவி பெறும் பள்ளி
தமிழ் - 93 பேர், ஆங்கிலம் - 24 பேர், கணிதம் - 207 பேர், சமூக அறிவியல் - 105 பேர், அறிவியல் - 223 பேர் முறையே பாடவாரியாக, 652 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.
சுயநிதி பள்ளிகள்
தாய்மொழி - 80 பேர், ஆங்கிலம் - 15 பேர், கணிதம் -114 பேர், சமூக அறிவியல் - 67 பேர், அறிவியல் - 184 பேர் முறையே பாடவாரியாக, 460 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக கணிதத்தில், 1,710 பேர், அடுத்து அறிவியலில், 1,530 பேர், தோல்வியை தழுவியுள்ளனர். மூன்றாவதாக சமூக அறிவியலில், 793 பேர், தாய்மொழியில், 775 பேர், ஆங்கிலத்தில், 159 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

Advertisement