நாய் கழுத்தில் காயத்தால் பீதி
ஈரோடு: சிவகிரி, சின்னியம்பாளையத்தில், வேல்ராஜ் என்பவரின் தோட்ட வீடு உள்ளது. வீட்டில் பராமரிப்பு பணி நடக்கிறது. பணியை மேற்கொள்ள வந்த பூரணம்-மணி தம்பதி அங்குள்ள வீட்டில் தங்கியுள்ளனர்.
இரு நாய்களை வளர்க்கின்றனர். நேற்று முன்தினம் ஒரு நாயை மட்டும் கட்டி போட்டு, மற்றொரு நாயை வீட்டு காவலுக்கு அவிழ்த்து விட்டு வெளியூர் சென்றனர். நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர். நேற்று காலை பார்த்த போது நாயின் கழுத்தில் வெட்டு காயம் தெரியவந்தது. சிவகிரி போலீசா-ருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தினர். கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார். வேலியில் சிக்கியதில் நாயின் கழுத்தில் ரத்த காயம் ஏற்பட்டதும் தெரிய வந்தது. சிவ-கிரி அருகே தம்பதி கொலையால் பீதி அடைந்துள்ள மக்களுக்கு, நாயின் கழுத்தில் வெட்டு விழுந்ததாக பரவிய தகவல் பீதியை ஏற்படுத்தியிருந்தது.
மேலும்
-
சென்னை ரயில்வே ஸ்டேஷனில் கணக்கில் வராத ரூ.38 லட்சம் பறிமுதல்
-
கலிபோர்னியாவில் வெடிகுண்டு தாக்குதல்; ஒருவர் பலி
-
ஹைதராபாத்தில் மூன்று மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பரிதாப பலி
-
மெக்சிகோ கடற்படை கப்பல் விபத்தில் சிக்கியது; 19 பேர் காயம்
-
பின்லாந்தில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 5 பேர் பரிதாப பலி!
-
முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!