தாசில்தாரிடம் 7 கிராம மக்கள் மனு

குளித்தலை: பாரம்பரிய முறைப்படி, மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்தக்கோரி, தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது.


குளித்தலை, மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 4ல் தொடங்-கியது. வரும், 20ல் திருத்தேர் வடம் பிடித்தல், தீ மிதித்தல் உள்-ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன. இதில், மாரியம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட மலையப்பன் நகர், பாரதி நகர், வாலாந்துார், தெற்கு மணத்தட்டை. தேவதானம், எழுநுாற்றுமங்கலம், கோட்ட-மேடு ஆகிய ஏழு கிராமங்களை சேர்ந்த ஒரு பிரிவு பொது மக்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.

இந்த திருவிழா தொடர்ந்து, கிராம பாரம்பரிய முறைப்படி சிறப்-பாக நடத்திட, வாலாந்துார் வக்கீல் சிவக்குமார் தலைமையில், நகராட்சி கவுன்சிலர் சக்திவேல், பொறியாளர் கணேசன், பிரதீப், வடிவேல் உள்ளிட்டோர், பொது மக்கள் சார்பில் குளித்தலை தாசில்தார் இந்துமதியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Advertisement