வெளிநாட்டு சாக்லேட்களில் ஆல்கஹால் இருப்பதாக அதிர்ச்சி

பெங்களூரு: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சாக்லேட்களில் ஆல்கஹால் அம்சம் இருப்பதாக கூறப்படுவதால், உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாட்டு துறை, சாக்லேட் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளது.

கர்நாடகாவில் பல்வேறு இடங்களில், வெளிநாடுகளின் இறக்குமதி சாக்லேட் விற்கப்படுகின்றன. இவற்றில் ஆல்கஹால் அம்சம் இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சாக்லேட் லேபிள்களில் ஆல்கஹால் அம்சம் இருப்பது குறித்து, எச்சரிக்கை தகவலும் குறிப்பிடாமலும் விற்பனை செய்கின்றனர்.

இதை தீவிரமாக கருதிய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை, சாக்லேட் மாதிரிகளை சேகரித்து, ஆய்வகத்துக்கு அனுப்புகிறது. இதுவரை 23 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த சாக்லேட்களின் லேபிள்களின் மீது, சாக்லேட்களில் ஆல்கஹால் அம்சம் இல்லாததை, அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

சிறார்கள் விரும்பி சாப்பிடும் சாக்லேட்களில், இத்தகைய அபாயமான அம்சம் இருப்பது, மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெளிநாட்டு இறக்குமதி சாக்லேட்களை விற்போரை அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.

Advertisement