பெங்., விமான நிலையம் அத்திப்பள்ளிக்கு 'ஏசி' பஸ்

பெங்களூரு: தமிழகத்தின் ஓசூர் அருகிலுள்ள பெங்களூரு ரூரல் அத்திப்பள்ளியில் இருந்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வரை, பி.எம்.டி.சி., 'ஏசி பஸ்' நாளை முதல் இயக்கப்பட உள்ளது.

கர்நாடகா - தமிழக எல்லையில் ஓசூர் அருகிலுள்ள உள்ள பெங்களூரு ரூரல் அத்திப்பள்ளியில் இருந்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு பி.எம்.டி.சி., பஸ் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்தது.

இந்நிலையில் அத்திப்பள்ளி - விமான நிலையம் இடையில் நாளை முதல் 'கே.ஐ.ஏ., 8 ஹெச்' என்ற ஏசி பஸ்சை பி.எம்.டி.சி., இயக்குகிறது.

அத்திப்பள்ளி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ் பிதரகுப்பே, சர்ஜாபூர், தொம்மசந்திரா, தொட்டகண்ணள்ளி, பெல்லந்துார் கேட், மாரத்தஹள்ளி பாலம், டின் பேக்டரி, நாகவரா சந்திப்பு, ஹெப்பால், சதஹள்ளி கேட் வழியாக 78 கி.மீ., துாரம் பயணம் செய்து விமான நிலையத்தை சென்றடைகிறது. அத்திப்பள்ளியில் இருந்து விமான நிலையத்திற்கு 430 ரூபாய் கட்டணம்.

விமான நிலையத்தில் இருந்து அத்திப்பள்ளிக்கு அதிகாலை 2:00; 3:00; 4:00; 5:00 மணி; காலை 6:00; 7:00 மணி; மதியம் 2:00; மாலை 3:00; 4:00; 5:00; 6:00 மணி; இரவு 7:00 மணிக்கு பஸ் புறப்படும்.

அத்திப்பள்ளியில் இருந்து விமான நிலையத்திற்கு காலை 5:30; 6:30; 7:30; 8:30; 9:30; 10:30 மணிக்கும்; மாலை 5:20; 6:15; இரவு 7:15; 8:15; 9:15; 10:20 மணிக்கும் பஸ் புறப்படுகிறது.

Advertisement