எய்ம்ஸ் ஹெலிகாப்டர் கேதார்நாத்தில் விபத்து

கேதார்நாத் : உத்தரகண்டில் உள்ள கேதார்நாத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. எனினும் அதில் சென்ற மூன்று பயணியர் காயம் இன்றி உயிர் தப்பினர்.

உத்தரகண்டில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு சென்ற ஸ்ரீதேவி என்ற பெண்ணுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டாக்டர், மருத்துவ உதவியாளர் மற்றும் கேப்டன் ஆகியோருடன், 'ஏர் ஆம்புலன்ஸ்' ஹெலிகாப்டர் கேதார்நாத் புறப்பட்டு சென்றது.

கேதார்நாத்தில் தரையிறங்க வேண்டிய ஹெலிபேட் அருகே சென்றபோது, ஹெலிகாப்டரின் வால் பகுதி திடீரென உடைந்ததால் பைலட் அதிர்ச்சி அடைந்தார். சுதாரித்த அவர், ஹெலிகாப்டரை ஹெலிபேடுக்கு முன்னதாக 20 மீ., தொலைவில் சமதள பரப்பில் தரையிறக்கினார். அதிர்ஷ்டவசமாக இதில் இருந்த டாக்டர் உள்ளிட்ட மூவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

Advertisement