போப் லியோ பொறுப்பேற்றார்

வாட்டிகன் சிட்டி: கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராக, போப் 14வது லியோ, நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். தன் உரையில், அமைதி மற்றும் ஒற்றுமையை அவர் வலியுறுத்தியுள்ளார்.
உடல்நலக் குறைவால் போப் பிரான்சிஸ் மறைந்ததைத் தொடர்ந்து, அடுத்த போப்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த, ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட், 69, சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், போப் 14வது லியோ என்று அழைக்கப்படுகிறார்.
வாட்டிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று, அவர் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின் அவர் பேசியதாவது:
அன்பு மற்றும் ஒற்றுமையே நம் அடிப்படையாக இருக்க வேண்டும். இதன் வாயிலாக உலகெங்கும் அமைதியை நிலைநாட்டுவதே நம் இலக்காக இருக்க வேண்டும்.
தற்போது உலகெங்கும் பல மோதல்கள், வெறுப்புகள், வன்முறைகள், பிரிவினைகள், பாகுபாடுகள் நிலவுகின்றன. இந்த சூழ்நிலைகளில் இருந்து வெளியேற, அன்பு மற்றும் ஒற்றுமையே முக்கிய கருவிகளாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
கந்தசுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
-
செங்கல்பட்டு சந்தை காய்கறி விலை நிலவரம்
-
கோவில் உண்டியல் உடைக்க முயற்சித்த மூன்று பேர் கைது
-
நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
-
துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் நடமாடியதாக வதந்தியால் பீதி
-
புதுச்சத்திரம் பகுதியில் கொட்டிய கனமழை மாவட்டத்தில் ஒரே நாளில் 432.90 மி.மீ., பதிவு