துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் நடமாடியதாக வதந்தியால் பீதி
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டியில் மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் நடமாடியதாக வதந்தி பரவியதால், மக்கள் பீதியடைந்தனர்.
சேந்தமங்கலம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்., திருமலைப்பட்டி பிரிவு அருகே, நேற்று முன்தினம் நள்ளிரவு, துப்பாக்கி வைத்துக்கொண்டு மர்ம நபர்கள் நடமாடியதாக வதந்தி பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
இதையடுத்து, சேந்தமங்கலம் எஸ்.ஐ., தமிழ்குமரன் மற்றும் போலீசார் காளப்பநாய்க்கன்பட்டி, காரவள்ளி சாலையில் உள்ள, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, கொல்லி
மலையை சேர்ந்த, இரண்டு பேர், சரக்கு ஆட்டோவில் மிளகு விற்பனைக்காக வந்ததும், நள்ளிரவு என்பதால் வழி தெரியாமல் ஒரு வீட்டில் சென்று வழி கேட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திரும்பி சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் பரவலாக கொட்டியது மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
இலவச பயணத்திற்கு மறுப்பு; முன்னாள் எம்.எல்.ஏ., வாக்குவாதம்; 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட கண்டக்டர்
-
அமைச்சருக்கு 'கோ பேக்' சொன்ன தர்மபுரி தி.மு.க., நிர்வாகிகள் நீக்கம்
-
8 மாவட்டங்களில் இன்று கனமழை
-
மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
-
வள்ளலார் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
Advertisement
Advertisement