கந்தசுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் விசேஷ நாட்களில் திருமணம், காது குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அந்த வகையில், நேற்றைய தினம் முகூர்த்த நாள், விடுமுறை நாள் மற்றும் சஷ்டியை முன்னிட்டு, கந்தசுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
சரவண பொய்கை குளத்தில் நீராடிய பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். மொட்டை அடித்தல், காது குத்துதல், எடைக்கு எடை துலாபாரம் எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
கோவில் வட்ட மண்டபத்தைச் சுற்றிலும் பெண்கள் அமர்ந்து, அகல் விளக்கேற்றி வழிபட்டனர்.
மேலும், கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடந்தன. தவிர, திருப்போரூர் உள்ளிட்ட மற்ற ஊர்களில் திருமணம் முடித்தோரும், கந்தசுவாமி கோவிலுக்கு வந்து, சுவாமியை தரிசித்தனர்.
அதேபோல் நெல்லிக்குப்பம், காட்டூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள முருகன் கோவில்களிலும், சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடந்தன.
இதில், அந்தந்த பகுதி பக்தர்கள் பங்கேற்று, கந்த சஷ்டி கவசம் பாடி வழிபாடு செய்தனர்.
மேலும்
-
தமிழகத்தில் பரவலாக கொட்டியது மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
இலவச பயணத்திற்கு மறுப்பு; முன்னாள் எம்.எல்.ஏ., வாக்குவாதம்; 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட கண்டக்டர்
-
அமைச்சருக்கு 'கோ பேக்' சொன்ன தர்மபுரி தி.மு.க., நிர்வாகிகள் நீக்கம்
-
8 மாவட்டங்களில் இன்று கனமழை
-
மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
-
வள்ளலார் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி