பிரார்த்தனா ஜோடி ஏமாற்றம்

டிரனவா: ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையர் பைனலில் இந்தியாவின் பிரார்த்தனா ஜோடி தோல்வியடைந்தது.


சுலோவாகியாவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் பிரார்த்தனா, நெதர்லாந்தின் ஹர்டோனோ அரியானே ஜோடி, பிரான்சின் எஸ்டெல் காசினோ, கரோல் மோனட் ஜோடியை எதிர்கொண்டது. இதில் ஏமாற்றிய பிரார்த்தனா, அரியானே ஜோடி 2-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது. பிரான்ஸ் ஜோடி கோப்பை வென்றது.

Advertisement