டாக்டர்களுக்கு சம்பளம் குறைவு உலக சுகாதார அமைப்பிடம் புகார்

சென்னை: இந்தியாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி ரோடரிக்கோ ெஹச் ஆப்ரினுக்கு, அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்ட குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை அனுப்பியுள்ள மனு:

உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைப்படி, தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில், சிறப்பான சேவையை பொது மக்களுக்கு அளித்து வருகிறோம். கிராம சுகாதார சேவையில், தமிழகத்தை முதல் மாநிலமாக நிலை நிறுத்தி வருகிறோம்.

இங்கு அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது.

உயிர்காக்கும் மருத்துவர்களை, தங்கள் ஊதியத்திற்காக தொடர்ந்து போராட வைப்பதை, உலக சுகாதார நிறுவனம் அனுமதிக்கக் கூடாது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில், போதிய எண்ணிக்கையில், மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்களை உருவாக்க அரசை வலியுறுத்த வேண்டுகிறோம். மேலும், அரசு மருத்துவர்களுக்கு, தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கவும், அரசை வலியுறுத்த வேண்டுகிறோம்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Advertisement