மின் மோட்டாரை சீரமைத்து குடிநீர் வினியோகம் துவக்கம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சி, 9வது வார்டுக்கு உட்பட்ட கலைஞர் கருணாநிதி தெருவில், 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில், ஆழ்துளைக் கிணறும் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வந்தது.

கடந்த இரு மாதங்களுக்கு முன், இந்த மின் மோட்டார் பழுதான நிலையில், சரி செய்யப்படாமல் இருந்தது.

இதனால், 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடி நீரின்றி தவித்தனர்.

இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் மின் மோட்டார் சரி செய்யப்பட்டு, மீண்டும் குடிநீர் விநியோகம் துவங்கி உள்ளது. இதனால், பகுதிவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement