காரில் 220 கிலோ குட்கா பறிமுதல்

வேலுார்: வேலுாரில் மூன்று நாட்களாக கேட்பாரற்று நின்ற காரில், 220 கிலோ குட்கா பொருட்களை, போலீசார் கைப்பற்றினர்.


வேலுாரை அடுத்த கொணவட்டம் சர்வீஸ் சாலையில், மூன்று நாட்களாக கேட்பாரற்ற நிலையில். மாருதி சுசுகி ஸ்விப்ட் கார் நின்றிருந்தது. தகவலின்படி சென்ற வேலுார் வடக்கு போலீசார் நேற்று சோதனையிட்டனர். காரில், 22 மூட்டைகளில், 220 கிலோ எடையில் தடை செய்யப்பட்ட குட்கா, கூல் லிப் உள்-ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. போலீசார் பறிமுதல் செய்து, கடத்தியவர்கள் யார், எங்கிருந்து கடத்தி வந்தனர் என்-பது குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement