இலவச பயணத்திற்கு மறுப்பு; முன்னாள் எம்.எல்.ஏ., வாக்குவாதம்; 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட கண்டக்டர்

மதுரை: 'குளிர்சாதன வசதி அரசு பஸ்சில் இலவசமாக பயணிக்க அனுமதி மறுத்ததால் கண்டக்டர் அபிமன்னனுக்கும், நிலக்கோட்டை தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தற்போதைய பா.ஜ., பிரமுகரான அன்பழகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இப்பிரச்னை தொடர்பாக கண்டக்டரை போக்குவரத்து கழக அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தது மற்ற ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்களில் மாணவர்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், பணிநிமித்தமாக வாரன்ட் வைத்துள்ள போலீசார், எம்.எல்.ஏ.,க்கள் என பல தரப்பினரும் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
முன்னாள் எம்.எல்.ஏ., வாக்குவாதம்
ஏப்.,24 தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து திருச்சிக்கு குளிர்சாதன வசதி அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதி முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வும், தற்போதைய பா.ஜ., பிரமுகருமான அன்பழகன், அவரது மனைவி ஆகியோர் திண்டுக்கல்லில் ஏறினர்.
பஸ் புறப்பட்டதும் கண்டக்டர் அபிமன்னன் டிக்கெட் கேட்டார். அன்பழகன்,'' தான் முன்னாள் எம்.எல்.ஏ.,'' என்றார். ஆனால் குளிர்சாதன அரசு பஸ்சில் பாஸ்களுக்கு அனுமதியில்லை என கண்டக்டர் தெரிவித்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வேறு வழியின்றி அன்பழகன் பணம் கொடுத்து டிக்கெட் பெற்றார்.
முக்கிய பிரமுகரிடம் வாக்குவாதம் செய்ததாக கண்டக்டர் அபிமன்னனை சஸ்பெண்ட் செய்தது போக்குவரத்துக்கழகம். ஊழியர்கள் கூறுகையில், ''குளிர்சாதன வசதியுள்ள அந்த பஸ்சில் 'இலவச பாஸ் அனுமதியில்லை' என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. சாதாரண பஸ்சில் தற்போதைய எம்.எல்.ஏ.,க்களுக்கும், அவரது உதவியாளர்களுக்கும் பாஸ் உள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ.,வை பொறுத்தவரை அவருக்கு பாஸ் உள்ளது. உதவியாளருக்கு கிடையாது என்றனர்.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், 'முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கும் குளிர்சாதன வசதிபஸ்சில் இலவச பயணத்திற்கு பாஸ் உள்ளது. இந்த பஸ்களில் போக்குவரத்து ஊழியர்கள் பலர் பாஸில் பயணித்தால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அவர்கள் அனுமதிப்பதில்லை என்பதற்காகவே இலவச பாஸ் அனுமதியில்லை என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது,' என்றனர்.





மேலும்
-
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
-
'அதிதி தேவோ பவ' - விருந்தினர் உபசரிப்பு ஏன் முக்கியம்?
-
அணுசக்தி உற்பத்தியில் தனியாருக்கு வாய்ப்பு: அடுத்த புதிய சட்ட திருத்தம்; மத்திய அரசு தயார்
-
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!
-
மோடியின் புதிய அணுகுமுறை பாகிஸ்தானுக்கு பாடம்
-
வாரம் துவக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.70,040!