பிரசாந்த் கிஷோர் கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர்

பாட்னா: முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.சி.பி.சிங், தனது ஆப் சப்கி ஆவாஸ் கட்சியை, பிரசாந்த் கிஷோர் கட்சியுடன் இணைப்பதாக நேற்று அறிவித்தார்.

தி.மு.க., உட்பட முக்கிய கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர், பீஹாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர். இவர் கடந்த ஆண்டு ஜன் சுராஜ் என்ற அரசியல் கட்சியை துவக்கினார்.

பீஹாரில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில், தங்கள் கட்சி, 243 தொகுதிகளிலும் போட்டியிடும் என, அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது அமைச்சரவையில், எக்கு துறை அமைச்சராக பதவி வகித்தவர், ஆர்.சி.பி.சிங். இவர், ஆப் சப்கி ஆவாஸ் என்ற கட்சியை நடத்தி வந்தார்.

அதற்கு முன் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராகவும் பதவி வகித்தார்.

தற்போது தன் கட்சியை, ஜன் சுராஜ் கட்சியுடன் இணைப்பதாக நேற்று ஆர்.சி.பி.சிங் அறிவித்தார். பிரசாந்த் கிஷோருடன் இணைந்து பீஹாரின் வளர்ச்சிக்கு பாடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement