கழிவறையால் வீணாகும் பணம்

சோழவந்தான் : சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் புதிய சுகாதார வளாகம் செயல்படாமல் மூடப்பட்டுள்ளது.

2021-22-ல் 15 வது நிதி குழு மானியத்தின் கீழ் ஏற்கனவே இருந்த சுகாதார வளாகம் ரூ.4.29 லட்ச மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ளது.தற்போதும் 2023-24 துாய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது.

அப்பகுதி முருகன் ''பழைய சுகாதார வளாகத்தில் போதுமான பராமரிப்பு, தண்ணீர் வசதி இல்லை.இதனால் பயன்படுத்த முடியவில்லை. புது சுகாதார வளாகமும் திறக்கப்படாமல் உள்ளது. இதையாவது மக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்'' என்றார்.

Advertisement