இரவிலும் இயங்கும் கல்குவாரியால் அபாயம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

2

வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே கொண்டையம்பட்டியில் விதிகளை மீறி இரவிலும் இயங்கும் கல் குவாரிகளை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் விபத்து அபாயம் உள்ளது.

இங்குள்ள வகுத்து மலையை ஒட்டிய வண்ணாத்தி கரட்டில் செயல்படும் கல் குவாரி இரவு, பகலாக விதிமுறைகளை மீறி இயங்குகிறது.

இது சட்டவிரோதம் மட்டுமின்றி, விதிகளை மீறுவதால் விபத்துகள், உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இரவில் 3க்கும் மேற்பட்ட பொக்லைன்கள் மணல் அள்ளும் இயந்திரங்கள், லாரிகள் வாகன வெளிச்சத்தில் மலை உச்சியில் இருந்து இயக்கப்படுகின்றன.

கல் குவாரிகள், கிரஷர்கள் காலை 7:00 முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே வேலை செய்ய வேண்டும். இப்பகுதி மலையில் காட்டு எருமை, பன்றி, மான், முயல்கள் வசித்தன.

இங்கு அமையும் வாடிப்பட்டி, தாமரைப்பட்டி 'அவுட்டர் ரிங்' ரோட்டை கடந்து ஒரு மலையில் இருந்து மற்றொரு மலைக்கு செல்ல தமிழகத்தில் முதல் 'அனிமல் பாஸ் ஓவர்' பாலம் கட்டப்பட்டுள்ளது. கல்குவாரி, கிரஷர் சத்தங்களால் வன விலங்குகள் இப்பகுதிக்கு வருவதில்லை. விபத்து, உயிரிழப்பு ஏற்பட்ட பின் ஆய்வு செய்யாமல், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

Advertisement