ஆக்கிரமிப்பில் ஆட்டோக்கள்

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் கேட்டுக்கடை மதுரை ரோட்டில் நிழற்குடை இல்லாத பஸ் ஸ்டாப்பில் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் ஆட்டோக்களால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

பாலமேடு, அலங்காநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மதுரை செல்லும் பஸ்கள் நின்று செல்கின்றன. இங்கு இட வசதி இல்லாத நிலையில் பஸ் ஸ்டாப் இன்றி பயணிகள் கடை வாசல்களில் காத்திருக்கின்றனர். அதிகளவில் நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்கள் பயணிகளுக்கு மட்டுமின்றி போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது. பஸ்சிற்கு காத்திருக்கும் பயணிகள் ஆட்டோக்களை கடந்து பஸ்சை பிடிக்க சிரமப்படுகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement