சங்கரன்பாறையில் ஜல்லிக்கட்டு: 35 பேர் காயம்

நத்தம் : -நத்தம் அருகே சொறிப்பாறைபட்டி- சங்கரன்பாறையில் முத்துமாரியம்மன், பாலமுருகன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது.

ஆர்.டி.ஓ.,சக்திவேல், தாசில்தார் ஆறுமுகம் தொடங்கி வைத்தனர். திண்டுக்கல், திருச்சி, நத்தம், புதுக்கோட்டை, தேனி, மதுரை போன்ற மாவட்டங்களிலிருந்து 600 காளை, 300 மாடுபிடிவீரர்கள் கலந்து கொண்டனர். அடக்கிய மாடுபிடி வீரர்கள், பிடிபடாத காளைகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது. காளைகள் முட்டியதில் தோட்டனுாத்து முத்துஅழகன் 30, சின்னாளபட்டி தங்கம் 25 என மாடுபிடி வீரர்கள் 16 பேர் உள்பட 35 பேர் காயமடைந்தனர்.

Advertisement