பாலமேட்டில் பழுதான தொட்டியால் அபாயம்

பாலமேடு : பாலமேடு பேரூராட்சி விளக்குத் துாண் பகுதியில் பழுதடைந்த குடிநீர் தொட்டியால் விபத்து அபாயம் உள்ளது.

இங்கு 40 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் தேவைக்காக 60 ஆயிரம் லீட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டியை முறையாக பராமரிக்காததால் துாண்கள் விரிசல் அடைந்தது. நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடின்றி உள்ளது. தற்போது இந்த குடிநீர் மேல்நிலை தொட்டி, அதற்கான மோட்டார் அறை சேதமடைந்து சிமென்ட் பூச்சுகள் அதிகளவில் பெயர்ந்து விழுகின்றன. இதனால் குடியிருப்புகள், கடைகளில் உள்ளவர்கள் அச்சத்துடன் உள்ளனர். குடிநீர் தொட்டியை பாதுகாப்பாக அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement