பஸ்சில் கூடுதல் வெப்பத்தால் அவதி

பேரையூர்: மதுரை, தேனியில் இருந்து ராஜபாளையம், செங்கோட்டை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரிக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பஸ்களில் அதன் தாக்கம் கடுமையாக எதிரொலிக்கிறது. பஸ்களின் கூரை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மரத்தால் அமைக்கப்பட்டது. இதனால் வெயில் காலங்களில் ஓரளவுக்கு வெப்பத்தை தாங்கிக்கொண்டன.

சமீப காலமாக புதிய பஸ்களின் கூரை இரும்பு தகடால் அமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் மைக்கா சீட்டால் அமைத்துள்ளனர். இவை வெப்பத்தை அப்படியே உள்வாங்குகின்றன. அந்த வெப்பம் பஸ்உள்ளுக்குள் பரவி பயணிகளை அவதிப்படுத்துகிறது. புதிய பஸ்களில் ஜன்னல்கள் அனைத்தும் கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளன. அரை அடி அளவுக்கே திறக்க முடியும். அதில் காற்று வரவழியில்லை. இருக்கைகள் நெருக்கமாக அமைந்துள்ளதால் புழுக்கமாக உள்ளது.

Advertisement