செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: குடியிருப்போர் அவதி குடியிருப்போர் அவதி

சிவகாசி : சிவகாசி அம்மன் கோவில்பட்டி தென்பாக தெருவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இரு மாதத்திற்கும் மேலாக செயல்படாததால் அப்பகுதி மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர்.

சிவகாசி அம்மன் கோவில் பட்டி தென்பாகத் தெருவில் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்பட்ட நிலையில் 2022 ல் அப்பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தின் மேலே எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சத்தில் போர்வெல்லுடன் கூடிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை இன்றி கிடைத்து வந்தது.

இந்நிலையில் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு சுத்திகரிப்பு நிலையத்தில் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் பழுதடைந்து விட்டது. மீண்டும் அதனை சரி செய்யாத நிலையில் அப்பகுதி மக்கள் மீண்டும் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். இதனால் தண்ணீரை விலை கொடுத்து தான் வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே உடனடியாக இயந்திரத்தை சரி செய்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement