சவேரியார் சர்ச் விழா தேர்பவனி

விருதுநகர் : விருதுநகர் அருகே கன்னிச்சேரிபுதுாரில் உள்ள சவேரியார் சர்ச்சில் திருவிழா தேர்பவனி நடந்தது.

விருதுநகர் மாவட்டம் கன்னிச்சேரிபுதுாரில் உள்ள சவேரியார் சர்ச் திருவிழா மே 9ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழாவை சென்னை ஜோசப், பாதிரியார் பீட்டர் ராய் ஆகியோர் சவேரியார் உருவம் பொறித்த கொடியினை ஏற்றி துவக்கி வைத்தனர். அதன் பின் தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா, நவநாள் திருப்பலி, மறையுரை நடந்தது.

இதன் முக்கிய நிகழ்வான 9வது நாள் நேற்று முன்தினம் கூட்டுத் திருப்பலி, மறையுரை மதுரை சதங்கை கலை தொடர்பு மைய முதல்வர் அலெக்ஸ் ஞானராஜ் தலைமையில் நடந்தது. இதையடுத்து சவேரியார் உருவம் வண்ணமலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட மின் அலங்கார தேர்பவனி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

மேலும் நேற்று காலை 7:00 மணிக்கு பெருவிழா, நன்றி திருப்பலியுடன் கொடியிறக்கம் மதுரை மரிய லுாயிஸ் தலைமையில் செய்யப்பட்டு திருவிழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை பாதிரியார் பீட்டர்ராய், மக்கள் செய்தனர்.

Advertisement