கும்பாபிஷேகம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியில் வீர காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

கணபதி பூஜையுடன் துவங்கி சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி, யந்திர ஸ்தாபனம், கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மங்கள வாத்தியம், சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களில் உள்ள புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், வீரகாளியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement