பி.எம்., ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி சாதனை

விருதுநகர் : விருதுநகரில் பி.எம்., ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் 2024 - 2025ம் ஆண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவி தயாஸ்ரீ 474 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி கிருத்திகா 484 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார்.

மாணவன் சந்தான கிருஷ்ணன் - இன்பார்மேட்டிக் பிராக்டீசஸ் பாடப்பிரிவிலும், மாணவன் கிஷோர் - புவியியல் பாடப்பிரிவிலும், மாணவி கிருத்திகா - செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவிலும் 100க்கு நுாறு மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். இவர்களை பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement