அகில இந்திய கூடைப்பந்து போட்டி இந்திய தரைப்படை அணி வெற்றி

-பெரியகுளம் : பெரியகுளத்தில் நடந்து வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் புதுடில்லி இந்திய தரைப்படை அணி அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் பி.டி.சிதம்பர சூரியநாராயணன் நினைவு கூடைப்பந்து போட்டி மே 15 முதல் 21 வரை காலை, மாலை மின்னொளியில் நாக் அவுட், லீக் சுற்று போட்டிகளாக நடந்து வருகின்றன.

நாக்அவுட் போட்டியில் திருவனந்தபுரம் கேரளா போலீஸ் அணியும், கோவை ராஜலட்சுமி கூடைப்பந்து அணியும் மோதின. கேரள போலீஸ் அணி 99:90 புள்ளிக் கணக்கில் வெற்றியை தன்வசமாக்கியது. பெங்களூரூ பாங்க் ஆப் பரோடா அணியும், சென்னை கஸ்டம்ஸ் அணியும் மோதின. பெங்களூரூ அணி 77:66 புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. புதுடில்லி இந்திய தரைப்படை அணியும், சென்னை தெற்கு ரயில்வே அணியும் மோதின.

ரசிகர்கள் ஆராவாரத்துடன் துவக்கத்தில் இருந்தே தரைப்படை அணி சிறப்பாக விளையாடியது. இந்திய தரைப்படை அணி 94:56 புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று (மே 19ல்) மாலை முதல் லீக் சுற்று போட்டிகள் துவங்குகின்றன. முதலிடம் பெறும் அணிக்கு பி.டி.சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பையுடன், ரூ.50 ஆயிரத்தை சில்வர் ஜூபிலி விளையாட்டு கிளப் செயலாளர் சிதம்பர சூரியவேலு, இரண்டாம் பரிசு வடுகபட்டி அழகு சங்கரலிங்கம் நினைவு சுழற்கோப்பை ரூ.40 ஆயிரத்தை மாவட்ட கூடைப்பந்து துணைத் தலைவர் டாக்டர் செல்வராஜ் வழங்குகின்றனர். இவை தவிர ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன. ஏற்பாடுகளை சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Advertisement