நடிகர் சங்க கட்டடம் தாமதத்திற்கு காரணம் என்ன; நடிகர் விஷால் விளக்கம்

மதுரை: சென்னை நடிகர் சங்கம் கட்டடம் தாமதமாவதற்கு நான் காரணமில்லை, என, மதுரையில் நடிகர் விஷால் தெரிவித்தார்.

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்து வெளியே வந்த அவர் கூறியதாவது: ரசிகர் மன்ற நிர்வாகி இல்ல திருமணத்திற்காக மதுரை வந்தேன். மீனாட்சி அம்மனை தரிசித்தேன். 2006ல் 'திமிரு' சூட்டிங்கிற்கு பின் இப்போது தான் வந்தேன். அம்மனை மனம் உருகி வேண்டிக்கொண்டேன்.

மதுரை மக்கள் பாசம் காட்டுவதும், உணவு உபசரிப்பு பண்பிலும் ஒருபோதும் மாற மாட்டார்கள். நுாறு ஆண்டுகளுக்கு பின் வந்தாலும் இதே பாசம், சிரிப்பு இங்கே இருக்கும்.

நடிகர் சங்கக் கட்டடம் தாமதத்திற்கு நான் காரணம் இல்லை. ஆறு மாதத்தில் முடிக்க வேண்டியதை, நடிகர் சங்கம் தேர்தல் வைத்து எண்ணிக்கை என்ற பேரில் நீதிமன்றம் சென்றதால் 3 ஆண்டுகள் தாமதமாகி விட்டது. இன்னும் 4 மாதங்களில் முடிந்து விடும். இந்தியா - பாக்., போர் தேவையில்லாதது, தவிர்த்திருக்கலாம். நம் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் போது கஷ்டமாக உள்ளது என்றார்.

Advertisement