கோயில் கும்பாபிஷேகம்

தேவகோட்டை : தேவகோட்டை ராம்நகர் தில்லைநகர் பகுதியில் பால் கணபதி, பாலமுருகன் உடனான தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பிள்ளையார்பட்டி கிருஷ்ணமூர்த்தி, அஸ்வின் சுரேந்திர சிவம் தலைமையில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், இரண்டு கால யாக பூஜை நடைபெற்றது.

நேற்று காலை கும்பத்தில் புனித நீர் ஊற்றி நடந்த கும்பாபிஷேகத்தை தொடர்ந்து அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தன.

நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் உட்பட ராம்நகர் தில்லை நகர் செந்தில்நகர் சத்யா நகர் சாந்தி நகர், முத்துநகரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement