மதுரையில் தரையிறங்கிய திருச்சி விமானங்கள்

அவனியாபுரம் : பெங்களூரு-, சென்னையிலிருந்து திருச்சி வந்த விமானங்கள் கனமழை காரணமாக மதுரையில் தரையிறக்கப்பட்டு மீண்டும் திருச்சி சென்றன.
பெங்களூருவில் இருந்து நேற்றிரவு 7:20 மணிக்கு 142 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் இரவு 8:30 மணிக்கு திருச்சி விமான நிலையம் சென்றது. அங்கு கனமழை பெய்ததால் விமானம் மதுரையில் தரையிறக்கப்பட்டது. திருச்சியில் வானிலை சரியான பின்பு அந்த விமானம் மதுரையில் இருந்து புறப்பட்டது இரவு 9:15 மணிக்கு திருச்சி சென்றது.
சென்னையில் இருந்து நேற்றிரவு 7:45 மணிக்கு புறப்பட்டு 8:40 மணிக்கு திருச்சியில் தரையிறங்க வேண்டிய விமானமும் கனமழை காரணமாக மதுரையில் தரையிறக்கப்பட்டது. சிறிது நேரத்திற்கு பின் அந்த விமானமும் மதுரையில் இருந்து திருச்சி சென்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காருக்குள் சிக்கி மூச்சு திணறி குழந்தைகள் 4 பேர் உயிரிழப்பு; ஆந்திராவில் சோகம்!
-
நைஜீரியாவில் பயங்கரவாத தாக்குதலில் 57 பேர் கொலை
-
காஷ்மீரில் பயங்கரவாதி கூட்டாளிகள் இருவர் கைது; பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை
-
திருமாவளவனை விமர்சிப்பதா? தாக்குதலில் ஈடுபட்ட வி.சி.,க்கள்
-
இலக்கிய மறுமலர்ச்சியின் பிறப்பிடம் பாலக்காடு; கேரள முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம்
-
குற்றவாளி மனைவியிடம் போனில் அத்துமீறிய போலீஸ்
Advertisement
Advertisement