போலீஸ் செய்திகள்:

கார், டூவீலர்கள் விபத்து ஒருவர் பலி, 3 பேர் காயம்

சிவகங்கை: சிவகங்கை இந்திரா நகர் முருகன் 40. இவரது டூவீலரில் மதுரைமுக்கு சந்திரசேகர் 43 காளையார்கோவில் நோக்கி சென்றனர். சிவகங்கை அருகே ராகிணிபட்டி கணேசன் 25, மூர்த்தி 25, ஆகிய இருவரும் ஒரு டூவீலரில் சென்றனர்.

அப்போது காளையார்கோவிலில் இருந்து கோயம்புத்துார் நோக்கி காரை கோயம்புத்துார் சைமன் 28, ஓட்டி வந்தார். கார், நாட்டரசன்கோட்டை விலக்கு அருகே பாலத்தின் மீது மோதிய நிலையில், காரின் மீது இரண்டு டூவீலர்களும் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 2 டூவீலர்களில் சென்ற 4 பேரும் பலத்த காயமுற்றனர்.

காயமுற்ற 4 பேர்களையும் சிகிச்சகை்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் 40, உயிரிழந்தார். காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் விசாரிக்கிறார்.

அரசு பஸ், கார் மோதல் 4 பேர் காயம்

எஸ்.புதூர்: எஸ்.புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற அரசு பஸ் மீது கார் மோதியதில் 3 பேர் காயமடைந்தனர்

சிங்கம்புணரியில் இருந்து புறப்பட்ட அரசு பஸ் மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று புழுதிபட்டி கிராமத்திற்கு திரும்ப சத்திரத்தில் காத்துநின்றது. அப்போது மதுரையில் இருந்து வந்த மேலும் 2 கார்கள் பொன்னமராவதி செல்ல அச்சாலையை குறுக்கே கடந்தது.

அப்போது சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இதில், காரில் வந்த ஹரி 40, காரை ஓட்டிய ரேவதி 38, சவுமாமினி, சரோஜா ஆகியோர் காயமுற்றனர். புழுதிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement