ராமகிருஷ்ண வித்யாலயா பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி

புதுச்சேரி: கருவடிக்குப்பம் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பள்ளி மாணவர் பிரதீஷ் 500க்கு 456 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தார்.
மாணவி ஷாலினி 448 மதிப்பெண், மாணவர் நவீன்குமார் 443 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.
சாதனை பெற்ற மாணவர்களை, சென்னை ராமகிருஷ்ண மடத்தின் துணை மையமாக உள்ள புதுச்சேரி ராமகிருஷ்ண மடத்தின் பொறுப்பாளர் நித்யேஷானந்தா ஜி மகராஜ் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.
பள்ளி தாளாளர் கணேசன், இயக்குநர் கிருஷ்ணராஜ், சேவா சங்க பொருளாளர் முத்துராமன், செயலாளர் சுரீந்தர், இணை செயலாளர் சாமிநாதன் மாணவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த துணை முதல்வர் சுந்தரமூர்த்தி மற்றும் ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும், 10ம் வகுப்பு தேர்வில், 450 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு, பிளஸ் 1 வகுப்பு சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும் என, பள்ளி தாளாளர் கணேசன் தெரிவித்தார்.
மேலும்
-
காருக்குள் சிக்கி மூச்சு திணறி குழந்தைகள் 4 பேர் உயிரிழப்பு; ஆந்திராவில் சோகம்!
-
நைஜீரியாவில் பயங்கரவாத தாக்குதலில் 57 பேர் கொலை
-
காஷ்மீரில் பயங்கரவாதி கூட்டாளிகள் இருவர் கைது; பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை
-
திருமாவளவனை விமர்சிப்பதா? தாக்குதலில் ஈடுபட்ட வி.சி.,க்கள்
-
இலக்கிய மறுமலர்ச்சியின் பிறப்பிடம் பாலக்காடு; கேரள முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம்
-
குற்றவாளி மனைவியிடம் போனில் அத்துமீறிய போலீஸ்