ஒருமைப்பாட்டு முகாம்: புதுச்சேரிக்கு சாம்பியன்ஷிப்

புதுச்சேரி: கர்நாடகா மாநிலம், சிமோகா மாவட்டம், வேம்பு பல்கலைக்கழகத்தில், 7 நாட்கள் முகாம் நடந்தது.

இதில், பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.முகாமில், புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி, வ.உ.சி., அரசு மேனிலைப் பள்ளி மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

கலை மற்றும் பண்பாட்டு ஒருமைப்பாடு தொடர்பான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றனர்.

சிறந்த தன்னார்வலர்களுக்கான பரிசினை விஷ்வா (பிரசிடென்சி பள்ளி), சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருக்கான பரிசினை ரேவதி பெற்றனர். மேலும்,இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் தனிச் செயலர் சுந்தரேசன், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, இணை இயக்குனர் சிவகாமி ஆகியோர் சாம்பியன்ஷிப் வாங்கியதற்கு பாராட்டு தெரிவித்தனர்.

முகாம் ஏற்பாட்டினை நாட்டு நலப்பணித் திட்ட மாநில அதிகாரி சதீஷ்குமார், நாட்டு நலப்பணித் திட்டமண்டல ஒருங்கிணைப்பாளர் கலைவாணி ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement