முதல்வர் மருந்தகத்தில் அதிகாரி ஆய்வு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி முதல்வர் மருந்தகத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக், கலெக்டர் அலுவலகத்தில் துறை சார்ந்த அலுவலர்களிடம் அரசு திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி வந்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அப்பகுதியில் செயல்படும் முதல்வர் மருந்தகத்தில் ஆய்வு செய்தார்.

அப்போது, விற்பனையாளரிடம் பொதுமக்கள் அதிகளவில் வாங்கும் மருந்துகள் இருப்புகள் உள்ளதா என கேட்டறிந்தார். இருப்பு இல்லாத மருந்துகளை உடனடியாக வரவழைத்து மக்களின் தேவையை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், சங்க செயலாளர் குமார், மருந்தாளுனர் யாழினி, கள அலுவலர் கனகவள்ளி உடனிருந்தனர்.

Advertisement