தென்னையில் நோய் தடுப்பு விவசாயிகளுக்கு பயிற்சி

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி வட்டாரத்தில் தென்னை சாகுபடியில் நோய் தடுப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி நடந்தது.
விக்கிரவாண்டி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தும்பூர், வாக்கூர் கிராமத்தில் நடந்த விழிப்புணர்வு செயல் விளக்க பயிற்சிக்கு, தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜெய்சன் தலைமை தாங்கி, தென்னையில் பாதிப்பை ஏற்படுத்தி, மகசூலை குறைத்திடும் ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'வெள்ளை ஈ தென்னை கீற்றுகளின் அடிப்புறத்தில் ஒட்டிக் கொண்டு வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுத்துகிறது.
இதனைக் கட்டுப்படுத்த, தென்னங்கீற்றுகளின் அடி பரப்பை நோக்கி தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும்.
மஞ்சள் ஒட்டுப்பொறி ஏக்கருக்கு 20 வீதமும், அபெர்டோகிரைசா இரை விழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு 400 வீதம் கீற்றுகளில் கட்ட வேண்டும்.
என்கார்சியா ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 10 இலைத் துண்டுகள் கட்டி, ஒரு லிட்டர் தண்ணீரில், வேப்ப எண்ணெய் 5 மில்லி அல்லது மீன் எண்ணெய் கரைசல் 2 மில்லியுடன் ஒட்டும் திரவத்தை கலந்து தெளிக்க வேண்டும்.
ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும் என கேட்டு கொண்டார். வாக்கூர் மற்றும் தும்பூர் கிராம முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
வாரம் துவக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.70,040!
-
காருக்குள் சிக்கி மூச்சு திணறி குழந்தைகள் 4 பேர் உயிரிழப்பு; ஆந்திராவில் சோகம்!
-
நைஜீரியாவில் பயங்கரவாத தாக்குதலில் 57 பேர் கொலை
-
காஷ்மீரில் பயங்கரவாதி கூட்டாளிகள் இருவர் கைது; பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை
-
திருமாவளவனை விமர்சிப்பதா? தாக்குதலில் ஈடுபட்ட வி.சி.,க்கள்
-
இலக்கிய மறுமலர்ச்சியின் பிறப்பிடம் பாலக்காடு; கேரள முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம்