தீமிதி திருவிழா

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணைய்நல்லுார் அடுத்த கருவேப்பிலைபாளையம் தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.

விழா, கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், சந்தனக் காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜையும், இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது.

நேற்று முன்தினம் அரவான் வீரபத்திரன் சுவாமி வீதியுலா, அரவான் சிரசு ஏறும் நிகழ்ச்சி, மகாபாரத கதையை மையமாக வைத்து மாடு வளைத்தல், கோட்டை இடித்தல் நிகழ்ச்சியும், பிற்பகல் 3:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது.

Advertisement