மனு தீர்வு நாள் முகாம்

நடுவீரப்பட்டு: நெல்லிக்குப்பத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான தீர்வு முகாம் நடந்தது.

நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்குகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்குகளை விரைந்து முடிக்க எஸ்.பி.,ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

அதன்பேரில், நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று தனியார் திருமண மண்டபத்தில் மனு தீர்வு நாள் முகாம் நடந்தது.

முகாமில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்து பேசி சுமூக தீர்வு காணப்பட்டது.

நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முகிலரசு, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் உடனிருந்தனர்.

Advertisement