மின்கம்பி அறுந்து விழுந்து மூதாட்டி பலி

காட்டுமன்னார்கோவில்: மழை பெய்த போது, மின்கம்பி அறுந்து விழுந்து மூதாட்டி இறந்தார்.

காட்டுமன்னார்கோவில், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மனைவி பழனியம்மாள்,60; ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை பெய்த திடீர் மழையின் போது, வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, மேலே செல்லும் மின்கம்பி அறுந்து பழனிம்மாள் மற்றும் ஆடு மீது விழுந்ததால் மின்சாரம் தாக்கி இறந்தனர். காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement