சிப்காட்டில் விபத்து: அ.தி.மு.க., ஆறுதல்

கடலுார்: கடலுார் சிப்காட் சாயத் தொழிற்சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கடலுார், சிப்காட்டில் லாயல் பேப்ரிக்ஸ் ரசாயன தொழிற்சாலையில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு டேங்க் வெடித்து தரைமட்டமானது. டேங்கில் இருந்த ரசாயன கழிவுநீர் அருகில் உள்ள குடிகாடு கிராமத்தில் வீடுகளுக்குள் புகுந்தது. 30க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறல், கண் எரிச்சல், வாந்தி, குமட்டல் ஏற்பட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களை தெற்கு மாவட்ட செயலாளருமான சொரத்துார் ராஜேந்திரன் சந்தித்து பழங்கள் வழங்கி ஆறுதல் கூறினார். பின், விபத்து நடந்த தொழிற்சாலை பார்வையிட்டார்.
தொழிற்சாலை நிர்வாகத்திடம், இதுபோன்று விபத்துமீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத், இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் பாபு, ஒன்றிய அவைத்தலைவர் ஆனந்தன், சண்முகம் உடனிருந்தனர்.
மேலும்
-
மோடியின் புதிய அணுகுமுறை பாகிஸ்தானுக்கு பாடம்
-
வாரம் துவக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.70,040!
-
காருக்குள் சிக்கி மூச்சு திணறி குழந்தைகள் 4 பேர் உயிரிழப்பு; ஆந்திராவில் சோகம்!
-
நைஜீரியாவில் பயங்கரவாத தாக்குதலில் 57 பேர் கொலை
-
காஷ்மீரில் பயங்கரவாதி கூட்டாளிகள் இருவர் கைது; பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை
-
திருமாவளவனை விமர்சிப்பதா? தாக்குதலில் ஈடுபட்ட வி.சி.,க்கள்